"எனக்குத் துணையாக இருக்கின்ற முதல்வர்" என துணை முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி சென்னை பெரம்பூர் மேம்பாலத் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலைஞர் பேசியதைத் தொடர்ந்து தி.மு.க.வில் ஸ்டாலின் தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது
‘கலைஞருக்குப் பிறகு தலைவராக யாரையும் ஏற்க மாட்டேன்’ என்ற அழகிரியின் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து சகோதரர்களுக்கு இடையிலான விரிசல் மேலும் வலுப்பெற "நீயா நானா" என்ற ரீதியில் மோதல் ஆரம்பம் ஆனது.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி "நான் கொடுத்த பேட்டியில் தலைவர் கலைஞரை தவிர வேற ஒரு தலைவரை ஏற்க யாருக்கு மனம் வரும் ? என்று சொன்னதை அந்த பத்திரிக்கை திரித்துக் பிரசுரித்துள்ளார்கள். 'தலைவர் கலைஞர், அடுத்தது யார் என்று அடையாளம் காட்டியிருப்பது முதலமைச்சர் பதவியை தானே ஒழிய அது கட்சி தலைவர் பதவி இல்லை. கட்சி தலைவர் பதவி என்பது பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும். முதலமைச்சர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது யார் வேண்டும் என்றாலும் இருக்கலாம்" என்று அழகிரி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
பொன்னாகரம் இடைத்தேர்தல் பற்றி கேள்வி கேட்ட போது "இனி வரும் தேர்தலில் எவ்வளவு வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கும் என்று கேளுங்கள் நான் சொல்லுகிறேன்" என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
( நன்றி: தினமலர் )
ஏப்ரல் 1 :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 31, 2010
நான் தலைவர், தம்பி முதல்வர் - அழகிரி அதிரடி
Posted by IdlyVadai at 3/31/2010 10:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











17 Comments:
கருணாநிதிக்கு அப்புறம் கட்சி இருந்தா முதல்வர், தலைவர் எல்லாம் பாத்துக்கலாம்.
எல்லாருக்கும் இருக்குடி ஆப்பு.
//கருணாநிதிக்கு அப்புறம் கட்சி இருந்தா முதல்வர், தலைவர் எல்லாம் பாத்துக்கலாம்.
எல்லாருக்கும் இருக்குடி ஆப்பு./
ஜெயலலிதாக்கு அப்புறம்.. கட்சி என்ன ஆகும். அப்போவெல்லாம் ஆப்பு இருக்காதா?
DMK will split as more parties. I expect atleast 6.
சாமானியர்கள் நாமலே கருணாநிதிக்கு பின் கட்சியை ஆராய்கிறோம்,சகுனிகள் அவர்கள் யோசிக்க மாட்டார்களா? நடக்கும் அநியாயங்களை பொருத்திருந்து பார்க்க வேண்டியது தான் தற்போதைய தமிழனின் ஒரே வழி!
எப்படியோ பங்கு பிரிப்பு சரியா நடந்தால் போதும் போல.
/*பொன்னாகரம் இடைத்தேர்தல் பற்றி கேள்வி கேட்ட போது "இனி வரும் தேர்தலில் எவ்வளவு வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கும் என்று கேளுங்கள் நான் சொல்லுகிறேன்" என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.*/
என்னைப் பொறுத்தவரை 2011லேயே தமிழ்நாடு அழிந்தால் உலகமாவது நன்னாருக்கும்.
The message was very clear when Alagiri made the statement itself. Like Sonia in Congress, Alagiri wants to control Stalin, future C.M.
It will be interesting to watch the developments when MK hands over the reign to his successor - 'to be selected by the General Council'! All the front line and second line leaders are already disappointed that they have no chance to climb up the party or government ladders competing with the MK clan. They have no option but to toe one of the two brothers. My feeling is that Alagiri will win hands down - he knows how to buy the voters and supporters! And also because, Stalin seems a better choice and TN never has the luck! - R. Jagannathan
அன்புள்ள இட்லிவடை,
தொட்டுக்கொள்ளும் சட்னி சாம்பார் மாதிரி நான் எழுதும் ( அதாவது சைடு டிஷ் கணக்கா.. மெயின் எழுத இன்னும் தயாராகல.....) http://mannairvs.blogspot.com என்ற 'வலை'ப் பூ முகவரியை உங்கள் பிரசித்திபெற்ற வலை பொக்கேவில் வெளியிட்டு எனக்கும் ஒரு முகவரி தர இயலுமா?
நன்றி.
மன்னை ஆர்.வி.எஸ்.
to IV & other readers -
"happy april fool's day" (muttalgal thina nal vaalthugal) ;-)
Vikram..
முட்டாள்கள் தினமெல்லாம் வருஷத்துல ஒரு நாள் முட்டாளாகறவங்களுக்குத்தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கில்லை.
நண்பர்களுக்கு,
இந்த பதிவு ஒரு ஏப்ரல் 1 பதிவு. அதற்கான விளக்கம் பதிவிலேயே இருக்கு. ஒரு மாறுதலுக்கு மஞ்சள் கமெண்ட் இல்லாமல் வெள்ளையில்.
எங்கே நான் நேற்று போட்ட இந்த கற்பனை செய்தி உண்மையாகிவிடுமோ என்ற பயத்தில் இந்த உண்மையை இங்கே சொல்ல வேண்டிய நிலமை.
நன்றி,
இட்லிவடை
naanga thaan kandu pidichitomla :-)
Vikram..
யோவ் இட்லி! நிஜச்செய்தி உங்களோட முட்டாள்கள் தினச்செய்தியை விட ஜாஸ்தி நம்பமுடியாமல் இருக்கிறது!
http://thatstamil.oneindia.in/news/2010/04/01/i-will-contest-dmk-leader-post-azhagiri.html
கிழவன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலி ஆகும்ன்னு காத்திருக்குற மாதிரி தெரியுது. கிழவன் மண்டையை போட்ட பின்னாடி, ரெண்டுபேரும் கூடவே புருட் லாங்குவேஜும் அடிச்சிகினு நிக்க போறாங்க.. அப்போ ராமதாசு, ஜே.ஜே, கேப்டன் போன்றவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
நானும் தெனம் ஆவலோட திண்ணை காலியான செய்தி வந்திருக்கான்னு பேப்பர பாக்கறேன்! என்ன தமிழ் நாட்டின் துரதிருஷ்டம்! Good things end so fast whereas....
இப்பவே 100 தொகுதிதான் கிடைத்திருக்கிறது. அழகிரியை பகைத்தால் மதுரைக்கு தெற்கே நிச்சயம் ஜெயிக்கமுடியாது என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். அதே போல் ஸ்டாலினை பகைத்து திமுக வை போல ஒரு கட்சிக்கு தலைவராக முடியாது என்பதும் அழகிரிக்கும் தெரியும். அதனால் ஊடகங்கள் நினைப்பது போல் எல்லாம் எதுவும் நிகழ்ந்துவிடாது. 2011ல் திமுக ஜெயிக்கும் பட்சத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். அடுத்த ஐந்தாண்டுக்குள் அழகிரி கட்சியை எப்படி தன் கட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதை பொருத்துதான் அழகிரியின் எதிர்காலம் இருக்கிறது. அடுத்த தலைமுறையில்தான் பிரச்சனை அதிகம். இன்னும் 3 தலைமுறைகளுக்கு பின் 234 உறுப்பினர்களும்(வேட்பாளர்கள் மட்டும்) கலைஞரின் குடும்பத்தினராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆண்டவா!! தமிழ் நாட்டுக்கு வந்த கெட்ட நேரம் ஓயவே ஓயாதா? கும்பல் கும்பலா வந்து கொள்ளை நடந்தே தீருமா?? அண்ணா காலத்தில் இருந்து சினிமா காரர்கள் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்ட இந்த தமிழ்நாட்டுக்கு விடுதலையே கிடைக்காதா?? குறைந்த பட்சம் திண்ணை மட்டுமன்றி அதிருக்கும் குடிசை(?)யும் இடிந்து அழிந்து தொலையாதா?
Post a Comment