இலவசமாக புகழ்ந்து எழுதிய பதிவு :-)
எல, நீ மூணாப்புதானல படிக்க? அந்தா போவுதான் பாரு. அவன் அஞ்சாப்பு முடிச்சுட்டான் தெரியுமா? அவனைப் பத்தி நீ என்னல நெனக்க? அப்படின்னு கேட்டா அந்தச் சின்னப் பையன் என்ன சொல்லுவான்? அவரு நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு சொல்லுவான். அதுவே அந்த அஞ்சாப்புப் பையன் கொஞ்சம் பெரிய கையா இருந்தா இவன் இன்னும் பம்முவான். இட்லிவடையைப் பத்தி நானும் சொல்லணுமுன்னா இப்படித்தான் பம்மணும். இந்த மாதிரி சம்பிரதாயமான பேசறதுக்கு முன்னாடி பழைய பதிவுங்களைப் புரட்டிப் பார்க்கலாமேன்னு போனா என்னென்ன மேட்டர் மாட்டுச்சு தெரியுமா?
இந்த மாதிரி எல்லாம் படிச்சுப்புட்டு, ஆஹா நீயுந்தானே ஆரம்பிச்ச புதுசுல ஏன் இந்தப் பெயர் அப்படின்னு பதிவைப் போட்ட, அப்புறம் ரீபஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டு விளையாட்டு செஞ்ச, பின்னூட்ட வெறி ஜாஸ்தி ஆகி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுன, புதசெவி அப்படின்னு சொல்லிக்கிட்டு கட் பேஸ்ட் செஞ்சுக்கிட்டு இருக்க, ஏப்ரல் பூல் எல்லாம் கூட செஞ்ச. அதுக்கெல்லாம் மேல நீயுந்தானே 2006லேர்ந்து பதிவு போட ஆரம்பிச்சயேய்யா. அப்போ அவந்தானா நீயின்னு சின்னப்புள்ளத்தனமாக் கேள்வி கேட்டா நான் நான் அளுதுருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஒண்ணு சொல்லறேன் . அவரு அன்னிக்கே நான் யார்ன்னு தெரிய ரொம்ப நாள் ஆவாதுன்னு பதிவு போட்டாரு. ஆனா இன்னைக்கு வரைக்கும் பார்ட்டி யாருன்னு தெரியாதுன்னு சொல்லி பதிவு போட்டாக்கூட ஹிட் ஆவது. ஆனா என்னியத் தெரிஞ்சவங்க ரொம்ப பேரு இருக்காங்கப்பூ!
இன்னும் ஒரு மேட்டர். இட்லி வடை கவுஜ எல்லாம் எழுதிப் படிச்சு இருக்கேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவரு வெண்பா எல்லாம் எழுதினது இல்லை. அவருக்காக நம்ம வெண்பா ஒண்ணு. இனிமேலாவது நம்புங்கப்பா நான் அவனில்லை!
இன்றோடு அஞ்சாச்சு இட்லிவடை ஆரம்பிச்சு
கொண்டாட வந்தாச்சு கூத்தோட பாட்டாச்சு
வெண்பாதான் போட்டாச்சு வித்தியாசம் தந்தாச்சு
இன்னமுமேன் சந்தேகப் பேச்சு?
டிஸ்கி: என்னதான் ஆரம்பித்த புதிதில் இருந்து கட்பேஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தினவருதான்னாலும் இட்லிவடைப் பதிவுகள் வெறும் கட் பேஸ்டா இல்லாம நகைச்சுவை இழையோடும் கருத்துக்களோட வரும். அது மட்டும் இல்லாமல் கட் பேஸ்ட் இல்லாத பதிவுகளும் நிறையா வரும்.
ஆனா இப்போ எல்லாம் அந்த மாதிரி பதிவுகள் வரது ரொம்பக் குறைஞ்சு போச்சு. செய்திகள் கூட சுடச் சுட இருக்கிறது இல்லை. ரொம்ப போர் அடிக்குது. ஒரு வேளை இவ்வளவு பதிவுகள் போடுவதால் கூட தரம் குறையுதோன்னு சந்தேகமா இருக்கு. அதனால எண்ணிக்கை குறைந்தால் கூடப் பரவாயில்லை. நாங்கள் இட்லிவடையை தினத்தந்தி ரேஞ்சில் செய்திகளை முந்தித் தரும் ஆளாப் பார்க்கலை. மீண்டும் அக்மார்க் இட்லிவடைப் பதிவுகளைப் பார்க்க ஆசைப்படுகிறோம் அப்படின்னு சொல்லிக்கிறேன்.
ஐந்து வருடங்கள் தொடர்ந்து எழுதுவது என்பது ஒரு பெரிய விஷயம்தான். அதிலும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு இருப்பது இன்னும் பெரிய விஷயம். எங்க துளசி ரீச்சர் கூட இம்புட்டுப் பதிவு போட்டது இல்லை. இதைச் செய்ததிற்கு இட்லிவடைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்!! நன்றி!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, October 31, 2008
ஆஹா! அவந்தானா நீயி! - இலவசம்
Posted by IdlyVadai at 10/31/2008 05:00:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
விளம்பர போஸ்டர், வெண்பா, ஒண்ணுமில்லாத மேட்டருக்கு ஒரு டிஸ்கிளைமர்... ஒத்துக்கறேன். இது கொத்தனா போஸ்ட்தான்னு ஒத்துக்கறேன்.
அது என்ன பெருசுங்க எல்லாம் தனியா ஒரு வாரம் போஸ்ட் போட்டு 'நான் அவன் இல்லை'ன்னு சொல்ல.... இவரு மட்டும் தனியா ஒரு நாள் வந்து சொல்லிட்டுப் போறாரு? அவசரமா ஏதோ மூடி மறைக்குற மாதிரி இருக்கே :-)
ஒன்னேகால் செஞ்சுரி அடிச்ச இட்லி வடை வாழ்க..!
யோவ் கொத்ஸ்... வடிவேலு வலுக்கட்டாயமா ‘நானும் ரவுடிதான்யா, நம்புங்க’ன்னு போலீஸ் வேன்ல ஏறுறகணக்கா நீயும் வந்து ஏன்யா டெரரக் கெளப்புற? உன்னிய யாருல இட்லி வடைன்னு சொன்னா? இதுல ‘து’ண்பா வேறா!
துக்ளக் அட்டைப்படத்தை சொடுக்கினால் லிங்கில் வேறு ஏதோ ஒரு படம் காட்டுது?
(இட்லி வடை பற்றி மற்றவர் எழுதிய)மத்த எல்லா பதிவுகளிலும் இட்லிவடையின் முன்னூட்டமும் கடைசியில் ட்ரேட் மார்க் மஞ்சள் பெயின்ட் அடித்த பன்ச் கமெண்டும் இருக்க (இட்லி வடை) இலவசக் கொத்தனார் போட்ட இந்தப் பதிவில் மட்டும் அது இரண்டும் இல்லாததை நான் கவனிக்கத் தவறினாலும் தமிழ்வலைப் பதிவுலகம் கவனிக்கத் தவறாது என்பதை தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
கி அ அ அனானி
Yellow Paint adika marandutar nu ninekaran, enna nan solaradhu!
Post a Comment