பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 18, 2006

அர(ரி)சியல்

கலைஞர் அறிவிப்பு
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ அரிசியை ரூ.2-க்கு வழங்குவோம் என்று அறிவித்தனர். அதாவது ரேசன் கடைகளில் 20 பகிலோ அரிசியை ரூ.40-க்கு வாங்கி கொள்ளலாம் என்று கூறப்பட் டது. ரேசன் அரிசியை கிலோ ரூ.2-க்கு விற்பதாக இருந் தால் மாநில அரசுக்கு ஆண் டுக்கு கூடுதலாக ரூ.600 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது என்றாலும் தி.மு.க. ஆட்சியை பிடித்தால் இந்த திட்டத்துக்கு முதல் கை யெழுத்து போடுவேன் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதனால் தி.மு.க.வினர் ரூ.2 -க்குப ஒரு கிலோ அரிசி என்று உற்சாகமாக பிரசாரம் செய்து வந்தனர்.

இந்த திட்டமும் இலவச கலர் டிவி திட்டமும் ஏழைகளுக்கு நன்றாக போய் சேர்ந்துள்ளது. இதனால் திமுகவிற்கு கொஞ்சம் பலம் வந்துள்ளது என்பது உண்மை.

ஜெ தடாலடி அறிவிப்பு

இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாபரேசன் அரிசி தொடர்பாக நேற்று தடாலடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் 10 கிலோ அரிசியை இலவசமாகவும், 10 கிலோ அரிசியை ரூ.35-க்கும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித் துள்ளார்.

எனவே அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 20 கிலோ ரேசன் அரிசி வாங்க ரூ.35 கொடுத்தால் போதும். இது தி.மு.க. அறிவித்துள்ள விலை யைவிட ரூ.5 குறைவு. ஜெயலலிதா அறிவிப்பு காரணமாக ஏழைகளுக்கு இன்னொரு பெரிய நன்மை யும் கிடைத்துள்ளது. அதாவது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியை ஏழை- எளிய மக்கள் ரூ.1.75-க்குë வாங்க முடியும். தி.மு.க. ஒரு கிலோ அரிசியை ரூ.2-க்கு கொடுப்பதாக கூறியது. ஆனால் அதையும் விட 25 பைசா குறைவாக அரிசி வழங்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது.

திருமா பாராட்டு

முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி 20 கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள திட் டம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பினால் தி.மு.க.கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. தி.மு.க.வின் வாக்கு வங்கி கணக்குகள் இந்த தேர்தலில் எடுபடாது.


கலைஞர் பதில்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுகவின் தேர்தல் அறிக்கையில், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்றோம். அதை அதிமுகவும், அவர்களுடைய புதிய தோழர் மதிமுகவும் கடுமையாக விமர்சித்தனர். இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று ஏளனம் பேசினர்.

இப்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அம்மையார் அறிவித்துள்ளார்.

இது ஒரு கொள்கை முடிவு அல்ல, பயனற்ற அறிவிப்பு, ஏமாற்று வேலை.

கிலோ அரிசி 2 ரூபாய் என்று திமுக கூறியதை கடுமையாக விமர்சித்த வைகோ ஜெயலலிதாவின் அறிவிப்பை வரவேற்பாரா? அப்படியானால் அவருக்கு இது சரியான மூக்கறுப்பாகும் என்று கூறினார் கருணாநிதி.

Update 19/04/06
வைகோ ரெஸ்பான்ஸ்

ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருகிறேன் என்றீர்களே, 2 ரூபாயில் இருந்த அரிசி விலையை 3.50 ஆக்கியதே நீங்கள் தான், 1999 ல். ரேசன் அரிசி விலையை உயர்த்தியதே கருணாநிதி தான். நம்முடைய பொது மக்களுக்கு கருணாநிதி என்றாலே 72 லிருந்து ஞாபகம் வருவது மக்கா சோளமும், கப்ப கிழங்கும் தான் என்று நாட்டில் பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற உண்மை.

இந்த சூழ்நிலையில் நான் நேற்று ஒரு கருத்தை சொன்னேன், மத்திய அரசு 2 ரூபாயை குறைத்தால் நாங்கள் எல்லாம் சேர்ந்து முதல்-அமைச்சரிடம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு போடச்சொல்லி கேட்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன்.

அப்படி பேசிக் கொண்டிருந்த போதே ஒரு துண்டு சீட்டு வந்தது. ஆண்டிப்பட்டியில் முதல்-அமைச்சர் அறிவித்து விட்டார்கள், 10 கிலோ அரிசி வாங்கினால், 10 கிலோ அரிசி இலவசம். தி.மு.க. வட்டாரம் நேற்று இரவில் இருந்து ரொம்ப திணறிப் போய் இருக்கிறது.

அரிசி திட்டங்களை இப்போது அறிவிப்பது ஏன்? சுஷ்மா கேள்வி

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச அரிசி வழங்குவதாகக் கூறுகிறது.

ரேஷன் அரிசி விலையை ரூ.2 ஆகக் குறைப்பதாக திமுகவும் கூறுகிறது. தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்த அதிமுகவும், திமுகவும் அவர்கள் ஆட்சி செய்தபோது இந்தத் திட்டங்களை ஏன் அமல் செய்யவில்லை?

தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில், கவர்ச்சியான அறிவிப்புகளைச் செய்து வருகின்றன என்றார்.

தோல்வி பயத்தால் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா - வீரமணி


ரேஷனில் ரூ.2-க்கு அரிசி வழங்குவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். அவ்வாறு வழங்க முடியுமா என்று ஜெயலலிதாவும், அவருடன் தற்போது சேர்ந்துள்ளவர்களும் கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்துள்ள கருணாநிதி நன்றாகச் சிந்தித்து, இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதனால், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந்திரளாக கூடி ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தோல்வி பயத்தால் 10 கிலோ அரிசி இலவசமாகத் தருவேன் என்று இப்போது ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2 ரூபாய்க்கு அரிசி எப்படி தரமுடியும் என்று கேள்வி எழுப்பிய ஜெயலலிதாவால் 10 கிலோ அரிசியை எப்படி இலவசமாக அளிக்க முடியும்?

இந்த இலவச அரிசி வழங்கும் அறிவிப்பை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது அதிமுக தேர்தல் அறிக்கையிலாவது வெளியிட்டிருக்க வேண்டும். மக்கள் தங்களை நிராகரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இந்த இலவச அரிசி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார் என்றார் வீரமணி.


வாக்குகளை பெறவே இலவச ரேஷன் அரிசி - ஜி.கே.வாசன்


தோல்வி பயத்தாலேயே இலவச ரேஷன் அரிசி வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் என மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.2-க்கு ஒரு கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடும் என அஞ்சியே, முதல்வர் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது வியப்பைத் தருகிறது.

ஜெவின் 'மயக்க பிஸ்கட்': ராமதாஸ்
திமுகவின் மலிவு விலை அரிசித் திட்டத்திற்குப் போட்டியாக 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

அவருக்கு வந்துவிட்ட தோல்வி பயமே இதற்குக் காரணம். இதுவே திமுக அணிக்குக் கிடைத்த ¬தல் வெற்றியாகும்.

ஒரு சந்து முனையில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத புதிய வாக்குறுதியை அளித்துள்ளதன் மூலம் தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளார் ஜெயலலிதா.

2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நிலையை சரிப்படுத்த கசப்பு மருந்து தருகிறேன் என்று கூறி ஏகப்பட்ட வரிகளைப் போட்டு மக்களை வாட்டினார் ஜெயலலிதா.

இப்போது இலவச அரிசி என்று கூறி மயக்க பிஸ்கட் கொடுத்து மக்களை மயக்கப் பார்க்கிறார். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஜெ எப்படி இலவச அரிசி தருவார்? ஸ்டாலின்


திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அத்தனையும் தவறாமல் நிறைவேற்றப்படும். இதுவரை எந்த கட்சியும் இப்படி ஒரு புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

திமுகவின் முக்கியமான அறிவிப்பு ஆளும் கட்சியை மிரட்டியுள்ளது. அதுதான் 1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பு. நாம் அறிவுத்தவுடன், அதற்கு மக்கள் வரவேற்பு கிடைத்தவுடன், வேக வேகமாக 10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்கிறார்கள்.

1 கிலோ அரிசி 2 ரூபாய் என்று கலைஞர் அறிவித்தபோது அதை கடுமையாக விமர்சித்தவர்கள், எப்படி 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்கலாம்? அது என்ன நியாயம்?

எங்களால் கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு தர முடியாது என்று கூறி ஜெயலலிதாவால் மட்டும் எப்படி இலவசமாக அரிசியைக் கொடுக்க முடியும்?

எந்த நிபந்தனையுமின்றி 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - ஜெ

ரேஷன் கடைகளில் ரூ. 3.50-க்கு வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசியில் 10 கிலோ இலவசமாக வழங்குவோம் என்றும், 10 கிலோ அரிசி வாங்கினால்தான் 10 கிலோ இலவச அரிசி என்றில்லாமல் தேவைப்படுவோர் 10 கிலோ இலவச அரிசியை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்

விஜயகாந்த்

நான் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்து மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்தேன். எங்களது தேர்தல் அறிக்கையை பார்த்து கேலி செய்தவர்கள்.

இன்று அதில் உள்ள அம்சங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர். ஏழைகளுக்கு 15 கிலோ அரிசி இலவசமாக அளிப்பதாக எங்களது கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

அதனால் மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்து இப்போது திமுகவும் அதிமுகவும் இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன.

இப்போது 10 கிலோ அரிசி இலவசமாகக் கொடுக்க முன்வந்திருக்கும் அதிமுக, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இதைச் செய்திருக்கலாமே. அதுபோல் மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருக்கும் திமுக தமிழகத்தில் தொழில் திட்டங்களை எதையும் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அரிசி மட்டும் கொடுத்தால் போதாது என்பதால்தான் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக குடும்பத் தலைவி பெயரில் தபால் அலுவலகத்தில் ரூ. 500 டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்தோம்.

இன்றைய அரிசி நிலவரம் :
மு.கருணாநிதி: ரேஷனில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும்.
விஜயகாந்த்: 15 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கப்படும்.
ஜெயலலிதா: 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும்.

25 Comments:

Karthikeyan Muthurajan said...

மு.க சொன்னது செயல்படுத்த கூடியதே என்பது இப்போது புரிகிறது. மேலும் இது வைகோவிற்கு மற்றோரு சறுக்கு...

முத்து(தமிழினி) said...

ஆட்சியில் இருந்தவரை அம்மையாரால் கொடுக்கமுடியவில்லை.திரும்ப வந்தால் தருவாராம்.நல்ல கதை.

முதலில் கொடுக்கமுடியாது என்று கூறிய அறிவாளிகள் எல்லாம் எங்கே?

ஜெயக்குமார் said...

இதில் ஒரு விசயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். வைகோ இதைப்பற்றி விமர்சனம் செய்யும் போது மத்திய அரசு இந்த திட்டத்திற்கான possibilities பற்றி சொல்லவில்லை. ஆனால் சிதம்பரம் இவ்வாரு அரிசி கொடுப்பது சாத்தியமே என்று கூறி மத்திய அரசு அரிசி வழங்கும் என்று கூறி உள்ளார். அதன் பிறகே ஜெயலலிதா இத்தகைய அறிக்கையை விட்டுள்ளார். நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு சிதம்பரம் கொடுக்கமுடியாது என்று கூறமுடியாதே!.

Idly Vadai said...

"திமுகவின் தேர்தல் வாக்குறுதியை கண்டு மிரண்டு போன அதிமுக இப்போது 10 கிலோ அரிசி இலவசமாக தருவோம் என்று அறிவித்திருக்கிறது. இப்போது வைகோ என்ன சொல்ல போகிறார். கருணாநிதி சொன்னது கூடுதல் மானியமாக ரூ.30. ஜெயலலிதா அறி வித்திருப்பது கூடுதல் மானியமாக ரூ.35. ரூ.30 சாத்தியமில்லை என்று கேலி செய்த வைகோ, ரூ.35ஐ சாத்தியம் என்று சொல்லப் போகிறாரா?

அண்ணன் கருணாநிதி சொன்னால் சாத்தியமில்லை; புதிய தங்கை ஜெயலலிதா சொன்னால் சாத்தியம் என்று வாதாடப் போகிறாரா? தேர்தல் பட்டிமன்றம் களைகட்டி விட்டது. வைகோவின் பதில் என்ன?" என்று சிதம்பரம் கேட்டிருக்கிறார் !

Anonymous said...

I dont know how long these politician going to do rice politics...This is all shows they think people are real mad!

செந்தழல் ரவி said...

///ஆனால் சிதம்பரம் இவ்வாரு அரிசி கொடுப்பது சாத்தியமே என்று கூறி மத்திய அரசு அரிசி வழங்கும் என்று கூறி உள்ளார். அதன் பிறகே ஜெயலலிதா இத்தகைய அறிக்கையை விட்டுள்ளார். நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு சிதம்பரம் கொடுக்கமுடியாது என்று கூறமுடியாதே!.////

மிக சரியான வாதம்....

neo said...

>> ஆனால் சிதம்பரம் இவ்வாரு அரிசி கொடுப்பது சாத்தியமே>>

இதுவரைக்கும்தான் சரி!

>> ... என்று கூறி மத்திய அரசு அரிசி வழங்கும் என்று கூறி உள்ளார். >>

அடங்.@&^%@^!

கலைஞரைப் பிடிக்கலன்னா கூமுட்டைத்தனமா ஏதும் சொல்லிடறதா?!

மத்திய அரசு இதில் நேரடியாகச் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை.

மாநில அரசின் செலவினத்தில்தான் அந்தக் கூடுதல் மானியம் சேரும். அதாவது வருடத்துக்கு சுமார் 550 கோடி ரூபாய்கள் (ரூ 2/- க்கு அரிசி போட்டால்).

மாநில அரசு செய்யக் கூடியது - மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் செய்வதை விட மாநில அரசே - தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதன் மூலம் - இத்திட்டத்துக்கான 'அடக்க விலையைக்' குறைக்க முயற்சி செய்வதன் மூலம் - அந்தக் கூடுதல் மானியச் செலவினத்துக்கான நிதி ஆதாரங்களைப் பெறுவதுதான்.

இது மாநில அரசின் கொள்கை முடிவு;

இதைச் செய்வோம் என்று விரிவாக தெளிவாக கலைஞர் கூட்டத்துக்குக் கூட்டம் விளக்கி விட்டார்.

அப்போதெல்லாம் - அவருடைய வாதத்துக்கு சரியான எதிவாதம் செய்யத் துப்புக் கெட்டவர்கள் - இந்த கொள்ளைக் கும்பல். இப்போது 'சிதம்பரம் சொல்லிவிட்டதால்' நாங்கள் அறிவித்தோம் என்பார்களாம்.

அதைக் கேட்டு தலையாட்ட இங்கிருப்போர் யாரும் மடையர்கள் அல்லர்.

தமிழின விரோதக் கும்பலுக்கு வெட்கமில்லை.

neo said...

அப்படி கலைஞர் தெளிவாக - எவ்வாறு இந்த அரிசி மானியத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்பதை அறிவித்த பின்னும் - "இது நடக்காது" ,"ஏமாற்று அறிவிப்பு", "கவர்ச்சித் திட்டம்" என்றெல்லாம் அதிமுகவும் அந்த கழிசடை கோபால்சாமியும் உளறிக் கொண்டிருந்தார்கள்.

2/- க்கு போட முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது 1.75/- க்கு எப்படி போட முடியும் என்று சிறு குழந்தை கூடக் கேட்டு விடும்!

அந்தத் திட்டத்தின் அடிப்படையையே கேள்வி கேட்ட அறிவுசீவிகள் - இப்போது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள் என்றதும் குட்டிக் கரணம் போடுவதும் - அதையும் சில திருவாளத்தான்கள் சிலாகிப்பதும் வெட்கக்கேடு.

அடுத்து என்ன Home theater with surround sound Free -யா?!! செய்யட்டும்!

கலைஞர் has decisively wrested the initiative!!

tch! tch! tch! :)

ஜெயக்குமார் said...

தமிழ் நாட்டில் 2 ரூபாய்க்கு அரிசி போடுவோம் என்பதை நம்பி ஏமாற உங்களை மாதிரி மாங்கா மடையர்கள் இருக்கும்போது. இது சாத்தியமில்லை என்று என்ன சொன்னாலும் நம்ப த்யாராக இல்லாத உங்களைப்போன்றவற்களை இப்படியெல்லாம் சொல்லித்தான் சமாளிக்கவேண்டியுள்ளது.
அட லூசுகளா காமராஜர் சொன்னது மாதிரி 2 ரூபாய்க்கு அரிசி போட்டா மத்திய அரசு விவசாயிகளிடம் எத்தனை ரோபாய்க்கு அரிசி வாங்கும் 5 ரூபாய்க்கா அல்லது 6 ரூபாய்க்கா. 5,6 க்கும் வித்துவிட்டு அவன் என்ன மண்ணையா சாப்பிடுவான். கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா?. அண்ணா 1967 தேர்தலின் போது இதுபோன்ற வாக்குறுதியை கொடுத்தார், அதற்கு காமராஜர் கூறிய விளக்கத்தைதான் நான் இங்கு கூறியுள்ளேன். அண்ணா ஆட்சிக்கு வந்தபிறகுதான் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்.

திருவாளர் பொதுஜனம் said...

இரண்டு பதிவிற்கு முன்னர் சரத்குமார் கூரிய பதிலில்:
"சிங்கப்பூரை உருவாக்கி நபர் கூறும்போது, "நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது, அது மனதிற்கு சரி என்று படும்போது, அதை தைரியமாக அந்த முடிவை எடுக்க வேண்டும். பூமியே பிளந்தாலும் அந்த முடிவை எடுகëக வேண்டும். அந்த முடிவில் இருந்து ஒருபோதும் மாறக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார். அந்தவொரு உறுதியான தலைவரின் கட்சியில்தான் நான் சேர்ந்துள்ளேன்."

அந்த உறுதியான தலைவர் 2004-தேர்தல் பிறகு பலவற்றில் பல்டி அடித்ததை (குறிப்பாக 'H'-முத்திரை, கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்...) மறந்து விட்டார் போலும். உறுதியான தலைவரின் மற்றோரு பல்டிதான் இந்த இலவச அரிசி அறிவிப்பு. இவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பல்டி அடிக்க மாட்டார் என்று என்ன உத்தரவாதம்?

SK said...

காமராஜர் பற்றிய குறிப்பைக் கூறி, பழையனவெல்லாம் நினைவு படுத்தி விட்டீர்கள்!

அந்த மவராசனைத் தோற்கடித்த பாவத்திற்குத் தான், இன்னும் தமிழகம் பலியாகிக் கொண்டிருக்கிறது!

2006-இலாவது விடிவு வர வேண்டும்!

ஜெயக்குமார் said...

சரியாகச் சொன்னீர்கள் SK, 1970-களில் ஊழலை ஆரம்பித்து வைத்ததுபோல் இந்த தேர்தலில் இலவசங்களை ஆரம்பித்துவைத்துள்ளார் கருணாநிதி, வேறு வழியில்லாமல அப்பாவி மக்களைக்கவர இதர கட்சிகளும் இலவசங்களை நாளுக்கு நாள் அறிவிக்கத்தொடங்கிவிட்டன, இந்த போலியான கவர்ச்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும், செய்வார்களா ஆட்டு மந்தைகளாக இருக்கும் நம் மக்கள்?

neo said...

>> 2 ரூபாய்க்கு அரிசி போட்டா மத்திய அரசு விவசாயிகளிடம் எத்தனை ரோபாய்க்கு அரிசி வாங்கும் 5 ரூபாய்க்கா அல்லது 6 ரூபாய்க்கா. 5,6 க்கும் வித்துவிட்டு அவன் என்ன மண்ணையா சாப்பிடுவான். கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா?. >>

திருவாளத்தான்கள் முதலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைச் சரியாகப் படிக்கட்டும். தமிழக அரசே நேரடியாக தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதின் மூலம் விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும்; பொது விநியோக அரிசியின் 'அடக்க விலையையும்' குறைக்கலாம்.

அதுவும் போக கலைஞரே சொன்ன மாதிரி 30,000 கோடி ரூபாய் அளவுக்குத் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் இந்த இன்றியமையா நலத்திட்டத்துக்கு வருடத்துக்கு 550 கோடி அள்வு ஆகப்போகும் கூடுதல் செலவை சுலபமாகச் செய்யலாம் என்று சொல்லிவிட்ட பிறகு வேறென்ன விளக்கம் வேண்டும்?!

சும்மா வசைபாடுவதை விட்டுவிட்டு தெளிவாக வாதம் செய்யவேண்டும். விளக்கம் அளித்துவிட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப பல்லவி பாடுவதால் யாருக்கு லாபம்?! அவரவர் 'உள் நோக்கங்கள்தான்' தெளிவாகப் புலப்படுகிறது!

SK said...

Please read this one too!!

"அரிசியல்"
அனா ஆவன்னா படித்தாலும் சரி
படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

வாரிசு முறையில் பிணக்குண்டா?
"பெரிசின்" பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
"அரிசியல்" தெரியுமா உனக்கு?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?

உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!

'அரிசியல்' பேசி அவமானப் படுத்துகிறார்.
'அரிசியல்' மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
'அரிசியல்'ஆல் ஆட்சிக்கு வந்தவர்
'அரிசியல்'ஆல் அழிவதுதானே முறை!

அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
"அரிசி" இன்று கொல்லும்!
இது புது மொழி!!

ரசிகர் கூட்டங்கள் உடனே வருமென்று
சரியாகத் தெரியும்எனக்கு!
'என்னெஸ்'சும் மற்றோரும்

Idly Vadai said...

Update 19/04/06 - வைகோ ரெஸ்பான்ஸ்

Idly Vadai said...

Update 19/04/06 - அரிசி திட்டங்களை இப்போது அறிவிப்பது ஏன்? சுஷ்மா கேள்வி

Idly Vadai said...

Update 19/04/06 - தோல்வி பயத்தால் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா - வீரமணி

Idly Vadai said...

Update 19/04/06 - வாக்குகளை பெறவே இலவச ரேஷன் அரிசி - ஜி.கே.வாசன

Idly Vadai said...

Update 19/04/06 -

ஜெவின் 'மயக்க பிஸ்கட்' - ராமதாஸ்

ஜெ எப்படி இலவச அரிசி தருவார்? - ஸ்டாலின்

Krishna said...

//அப்படி பேசிக் கொண்டிருந்த போதே ஒரு துண்டு சீட்டு வந்தது. ஆண்டிப்பட்டியில் முதல்-அமைச்சர் அறிவித்து விட்டார்கள், 10 கிலோ அரிசி வாங்கினால், 10 கிலோ அரிசி இலவசம். தி.மு.க. வட்டாரம் நேற்று இரவில் இருந்து ரொம்ப திணறிப் போய் இருக்கிறது.//

அப்பத்தான் துண்டு சீட்டு மூலமா அம்மா கொடுக்கறேன்னு சொன்னது தெரிஞ்சதாம், ஆனா, அந்த அம்மா அறிவிப்பால, திமுக வட்டாரம் திணறிப் போனது இங்கிருந்தே ஞான திருஷ்டியால உடனே தெரிஞ்சுதாம்.

Krishna said...

தல, இந்த துண்டு சீட்ட வெச்சி, தயாநிதி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறாரே, அத புடிச்சி போடு தல. நம்ம அண்ணாச்சிங்கக் கிட்டயிருந்து புது சப்பகட்டு வரும், கொஞ்சம் நோய் விட்டு போகும் (வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகுமில்லையா)

Idly Vadai said...

update 19/4/06
தமிழ் முரசு காட்டூன் :-)

Idly Vadai said...

Update 19/4/06 - எந்த நிபந்தனையுமின்றி 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - ஜெ

aathirai said...

kanimozhiyin thiruvodu ilavasam katturai paarunga


http://ullal.blogspot.com/2006/04/blog-post_114547870439350270.html

Idly Vadai said...

Update: 22/4/06 - அரிசி பற்றி விஜயகாந்த்!