பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 14, 2005

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

தங்கர்பச்சன் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்.

தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கும் தொடரபட்டன.

குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க. இன்று மனு

தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

"குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.

மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.

தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.

கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.

இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.

வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.

திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.

"என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும் கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.

எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்

செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

கடைசி செய்தி: ( சத்யராஜ், வடிவேலு )

சத்யராஜ்: நடிகர், நடிகைகள் பேச்சை நாடே உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் நல்லதைப் பேசினாலும் கெட்டதைப் பேசினாலும் அதற்கேற்றாற்போல் பல மடங்கு விளைவு ஏற்படும். பிரபலமடைந்ததற்கான விலை அது. எனவே நடிகர், நடிகைகள் பொது மேடைகளில் பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். முடிந்துபோன ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறி சர்ச்சையை எழுப்புவது கொம்பு சீவி விடுவது போல. சுஹாசினி அவ்வாறு பேசியதைத் தவிர்த்திருக்கலாம்.

வடிவேலு: குஷ்புவால் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க எல்லோரும் பாடுபட்டோம். அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் சுஹாசினி இப்போது தேவையில்லாமல் அந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரையும் வம்புக்கு இழுப்பது போல் பேசியுள்ளார்.

இவர்கள் எல்லோருக்கும் இட்லிவடை சார்பில் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் !

10 Comments:

ராம்கி said...

kannamootchi.. re..re...Happy Children day!

rajkumar said...

Brilliant

Anbudan

Rajkumar

மூர்த்தி said...

இந்த வாய ஏன்தான் கடவுள் படைச்சானோ தெரியல. ஆளாளுக்கு பெரிய மனுஷங்களா மாறிடுறாங்கப்பா!

பினாத்தல் சுரேஷ் said...

Super Thalaivaa..

Naanum unga compilation-ai use pannikitten. (thanks)

Idly Vadai said...

ரஜினி ராம்கி, ராஜ்குமார், மூர்த்தி, சுரேஷ் - எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் :-)

சுரேஷ் - காசா பணமா - யூஸ் பண்ணிக்கோங்க

சுக்குகாப்பி said...

கலைச்சேவை என்று சொல்லி சதை சேவை புரிந்தவர்கள். தாசிகளும் வேசிகளும் தலைவியாகுரகாலம் போல.
குழந்தைகள்
தின வாழ்த்துக்கள்.
குழந்தைகளே ஜாக்கிரதை!
வேர என்னத்த சொல்ல.

பரஞ்சோதி said...

குழந்தைகள் தினம் தலைப்பை பார்த்து வந்தால் இங்கே வளர்ப்பு சரியில்லாத குழந்தைளைப் பற்றி சொல்லியிருக்கீங்க.

அனைத்து நண்பர்களின் குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Idly Vadai said...

கடைசி செய்தி: சத்யராஜ், வடிவேலு தங்கள் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கும் Belated குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !

Go.Ganesh said...

என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு....
எனக்கும் உங்களுக்கும் சேர்த்து belated வாழ்த்துக்கள்

இட்லி வடையுடன் சேர்த்து மதியம் சாப்பாடும் பரிமாறப் பட்டது போல் இருக்கிறது.

எப்படிய்யா உங்களால இப்படியும் யோசிக்க முடியுது....

அடிச்சா நெத்தியடியாத்தான் அடிக்கிறீங்க

Anonymous said...

Please mail me how to type in tamil blogs in tamil.
Dying to learn it.
dssonthenet@hotmail.com

thanks,
Shan.